Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ராகு & கேது பெயர்ச்சி பலன்கள் - கன்னி!

வெள்ளி, 28 ஜூலை 2017 (12:55 IST)

Widgets Magazine

சமயோஜித புத்தியுடன் பேசுபவர்களே! உங்களுக்கு இந்த ராகுவும், கேதுவும் இணைந்து 27.7.2017 முதல் 13.02.2019 வரை உள்ள  காலகட்டங்களில் என்ன மாற்றத்தைத் தருவார்கள் என்று பார்ப்போம்.
 
இராகுவின் பலன்கள்:
  
இதுவரை உங்களின் ராசிக்கு பனிரெண்டில் அமர்ந்து கொண்டு காரியத்தடைகளையும், மனஉளைச்சல்களையும், அடுத்தடுத்த பயணங்களால் செலவுகளையும் தந்துக் கொண்டிருந்த ராகுபகவான் இப்பொழுது உங்கள் ராசிக்கு லாப வீடான 11&ம் வீட்டிற்கு வருவதால் உங்களின் புகழ், கௌரவம் உயரும். எதிலும் வெற்றி பெறுவீர்கள். சவாலான காரியங்களைக் கூட சர்வ  சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். நீங்கள் கடனாக கொடுத்த பணமும் கைக்கு வரும். குடும்பத்தில் சந்தோஷம் குடிக்கொள்ளும். எதிரும் புதிருமாக சண்டை போட்டுக் கொண்டிருந்த கணவன்&மனைவி உறவு இனி நகமும்  சதையுமாக மாறும். வீண் செலவுகளை குறைத்து அத்தியாவசிய செலவுகளை மட்டும் செய்வீர்கள். எத்தனையோ மருத்துவரை  அணுகி மருந்து, மாத்திரை சாப்பிட்டும் வீட்டில் துள்ளி விளையாட ஒரு குழந்தை இல்லையே என ஏங்கித் தவித்தவர்களுக்கு  மழலை பாக்யம் கிட்டும். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துக் கொள்வார்கள். அவர்கள் உயர்கல்வியில் வெற்றி பெற்று உங்களை தலை நிமிர செய்வார்கள். குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். புது வேலைக் கிடைக்கும்.  நீண்ட நாளாக எதிர்பார்த்து காத்திருந்த விசா கிடைத்து அயல்நாடு செல்வீர்கள். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை  மீண்டும் பெறுவீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி  உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர், நண்பர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். கோவில் கும்பாபிஷேகத்திற்கு தலைமை தாங்குவீர்கள். மூத்த சகோதரங்களால் பயனடைவீர்கள். நீங்கள் சொல்லாததையும், சொன்னதாக நினைத்துக் கொண்டு மனக்கசப்பால் விலகியிருந்த மனைவிவழி உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். பாதிப்பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதித் தொகை கொடுத்து பத்திரப்பதிவு செய்வீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.     
         
இராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
 
உங்களின் ராசியாதிபதியும்&ஜுவனாதிபதியுமான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் 27.7.2017 முதல் 4.4.2018 வரை ராகுபகவான்  செல்வதால் இக்காலக்கட்டங்களில் எந்தப் பிரச்னையாக இருந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம் என்ற தைரியம் பிறக்கும்.  திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். விலை உயர்ந்த ஆபரணங்கள்  வாங்குவீர்கள். குடும்ப வருமானத்தை உயர்த்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நரம்புச் சுளுக்கு, சளித் தொந்தரவு,  பித்த வாந்தி, வாயில் புண் வந்துப் போகும்.
 
5.4.2018 முதல் 10.12.2018 வரை ராகுபகவான் உங்களின் ஜீவனாதிபதியும்&லாபாதிபதியுமான சனிபகவானின் பூசம் நட்சத்திரத்தில்  செல்வதால் புதிய எண்ணங்கள் செயல் வடிவம் பெறும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். மகன் கூடாப்பழக்கங்களிலிருந்து  மீள்வார். மகளுக்கு ஊரே மெச்சுபடி திருமணத்தை நடத்துவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் சென்று  நிறைவேற்றுவீர்கள். பழைய கடன் பிரச்னை ஒன்று தீரும். பூர்வீகச் சொத்து சம்மந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.  வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். உறவினர்களின் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும்.
     
உங்களின் சுக&சப்தமாதிபதியான குருபகவானின் புனர்பூசம் நட்சத்திரம் 4&ம் பாதம் கடக ராசியில் 11.12.2018 முதல் 13.2.2019  முடிய ராகுபகவான் பயணிப்பதால் கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். தாயாரின் உடல் நலம் பாதிக்கும். அவர் கோபப்பட்டு  பேசினாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். கணவன்&மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும்  ஆனாலும் பணவரவிற்கு குறைவிருக்காது. புதிதாக ஆடை, ஆபரணங்கள் சேரும். மனைவிக்கு இடுப்பு வலி, இரத்த சோகை,  மூச்சுத் திணறல் வந்துச் செல்லும்.  
 
கன்னிப்பெண்களே! சமயோஜித புத்தி அதிகரிக்கும். கல்வியும் இனிக்கும், காதலும் இனிக்கும். உங்கள் ரசனைக் கேற்ப நல்ல  வரன் அமையும். பெற்றோர் உங்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள்.
 
மாணவ&மாணவிகளே! உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சக மாணவர்களின் சந்கேங்களை தீர்த்து வைப்பீர்கள்.  நண்பர்கள் சிலரின் சுயரூபத்தை இப்பொழுது உணருவீர்கள். நினைவாற்றலை அதிகப்படுத்திக் கொள்ள கீரை காய்களை  உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இசை, ஓவியம், விளையாட்டுப் போட்டிகளில் பரிசு, பாராட்டைப் பெறுவீர்கள்.    
 
அரசியல்வாதிகளே! அனைத்துக் கட்சியினரையும் அனுசரித்துப் போகும் மனப்பக்குவம் வரும். போட்டிகளை முறியடித்து  முன்னேறுவீர்கள். கலைத்துறையினர்களே! அயராத உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். மூத்த கலைஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள்.
 
வியாபாரம் செழிக்கும். வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டிலிருப்பவர்களின் உதவியால் சிலர் சில்லரை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்திற்கு மாறுவீர்கள்.  வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கடையை நவீனமாக்குவீர்கள். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். கன்சல்டன்சி, உணவு, ஃபைனான்ஸ், லெதர் வகைகளால் ஆதாயமடைவீர்கள். வேற்றுமொழிப் பேசுபவர்களால் அனுகூலம் உண்டு.   
 
உத்யோகத்தில் உங்களுடைய தொலை நோக்குச் சிந்தனைக்கு பாராட்டுகள் கிடைக்கும். அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். சக  ஊழியர்களும் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். பதவி உயரும். சம்பள பாக்கி கைக்கு வரும். விரும்பிய இடத்திற்கே  மாற்றம் கிடைக்கும். வேறு நல்ல நிறுவனத்திலிருந்தும் புது வாய்ப்புகள் வரும்.
 
கேதுவின் பலன்கள்:
    
இதுவரை உங்களின் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்துக் கொண்டு திடீர் யோகங்களையும், பிரபலங்களின் அறிமுகத்தையும்,  பணப்புழக்கத்தையும் பெற்றுத் தந்த கேது பகவான் இப்பொழுது உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய வீடான ஐந்தாம் வீட்டிற்கு  வந்து அமர்கிறார். எனவே புத்தி ஸ்தானமான 5&ம் வீட்டில் கேது அமர்வதால் முடிவுகள் எடுப்பதில் குழப்பங்கள் வந்துப் போகும்.  புதிய திட்டங்களை நிறைவேற்றுவதில் தடை, தாமதமங்கள் ஏற்படும். பூர்வீக கொத்துப் பிரச்னை விஸ்வரூபமெடுக்கும்.  பிள்ளைகளிடம் உங்களின் பழங்கதைகளையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும், உணவையும் உட்கொள்ள  வேண்டாம். உறவினர்கள் உங்களை தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். திடீரென்று அறிமுகமாகும் நண்பர்களை நம்ப வேண்டாம். வருமானத்தை உயர்த்த போராடுவீர்கள். குடும்பத்தினருடன் செலவிடக்கூடிய நேரம் குறையும். பழைய கடன் பிரச்னையை  நினைத்து அவ்வப்போது புலம்புவீர்கள். இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். மற்றவர்களை நம்பி இருக்காமல் தன் முயற்சியால் என்ன முடிகிறதோ அதை செய்து முன்னேறுவோம் என்ற முடிவுக்கு வருவீர்கள். வாகனம்  பழுதாகி சரியாகும். உங்களை நேரில் பார்த்தால் புகழ்ந்து பேசுவதாகவும், நீங்கள் இல்லாத போது உங்களைப் பற்றி  விமர்சிப்பதாகவும் இருப்பவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம். வெளிவட்டாரத்தில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும்  உண்டாகும். மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். மகனின் உயர்கல்வி, உத்யோகம்  சம்பந்தப்பட்ட முயற்சிகள் சற்று தாமதமாகி முடியும். அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். 
     
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
27.7.2017 முதல் 29.11.2017 வரை உங்களின் திருதிய&அஷ்டமாதிபதியுமான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம் 1, 2&ம் பாதம் மகர  ராசியில் கேதுபகவான் செல்வதால் இக்காலக்கட்டங்களில் சகோதரங்களால் நிம்மதியிழப்பீர்கள். சொத்து வாங்குவது, விற்பதில்  வில்லங்கம் வந்துச் செல்லும். குடும்பத்தினருடன் வெளியூர் செல்வதாக இருந்தால் பணம், நகைகளையெல்லாம் வங்கி  லாக்கரில் வைத்துவிட்டு செல்வது நல்லது. களவுப் போக வாய்ப்பிருக்கிறது. சொந்த வாகனத்தில் இரவு நேரப் பயணங்களை  தவிர்ப்பது நல்லது. சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும்.  
     
உங்களின் லாபாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 30.11.2017 முதல் 06.08.2018 வரை கேது செல்வதால் குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும். கணவன்&மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். புது பதவிகள், பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். பூர்வீக சொத்தை மாற்றி புதிதாக வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகள், பொது  விழாக்களில் உங்களுக்கு முதல் மரியாதைக் கிடைக்கும். 
 
7.08.2018 முதல் 13.2.2019 வரை உங்களின் விரையாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2, 3, 4&ம் பாதம் மகர ராசியில்  கேது செல்வதால் எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகள் துரத்தும். பழைய வீட்டை இடித்துக் கட்டுவதற்கு சில புது முயற்சிகள் மேற்கொள்வீர்கள். அரசு காரியங்கள் சற்று தாமதமாகி முடியும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். றிந்து பேசுவது  நல்லது.
   
வியாபாரத்தில் சந்தை நிலவரத்தையும், மக்களின் ரசனைகளையும் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப பொருட்களை கொள்முதல் செய்து லாபம் ஈட்டப்பாருங்கள். பெரிய முதலீடுகள் வேண்டாம். வேலையாட்கள் கொஞ்சம் முரண்டு பிடிப்பார்கள். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகளுக்கு தகுதாற்போலும் பேசும் வித்தையையும்  கற்றுக் கொள்ள வேண்டுமென்ற முடிவிற்கு வருவீர்கள். சக ஊழியர்களின் விடுப்பால் வேலைச்சுமை அதிகமாகும். புது உத்யோக வாய்ப்புகள் வந்தாலும் பொறுத்திருந்து செயல்படுவது நல்லது.
 
இந்த ராகு&கேது மாற்றம் உங்கள் செயல் வேகத்தை அதிகப்படுத்துவடன், அழகு, ஆரோக்யம், பணம், பதவியையும் தரும்.
 
பரிகாரம்:
 
சிதம்பரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீதில்லைக்காளியம்மனை குங்குமார்சனை செய்து வணங்குங்கள். ஆதரவற்ற முதியவருக்கு  உதவுங்கள்.
 
- கே.பி. வித்யாதரன்


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ராகு & கேது பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்!

எங்கும் எதிலும் முதலிடத்தை விரும்புபவர்களே! உங்களுக்கு 27.7.2017 முதல் 13.02.2019 வரை ...

news

ராகு & கேது பெயர்ச்சி பலன்கள் - தனுசு!

உயர்ந்த லட்சியங்களுடன் வாழ்பவர்களே! உங்களுக்கு இந்த ராகுவும், கேதுவும் இணைந்து 27.07.2017 ...

news

ராகு & கேது பெயர்ச்சி பலன்கள் - கடகம்!

எதையும் திருத்தமாக செய்பவர்களே! உங்களுக்கு இந்த ராகுவும், கேதுவும் இணைந்து 27.7.2017 ...

news

ராகு & கேது பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்!

குற்றம், குறைகளை பெரிதுப்படுத்திக் கொள்ளாமல் பெருந்தன்மையுடன் வாழ்பவர்களே! உங்களுக்கு ...

Widgets Magazine Widgets Magazine