திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 15 அக்டோபர் 2017 (08:22 IST)

சென்னை-நெல்லை முன்பதிவில்லா சிறப்பு ரயில்

தீபாவளி தினம் கொண்டாட சென்னையில் இருந்து தென்மாவட்டத்திற்கு செல்லும் ரயில்களின் டிக்கெட்டுக்கள் ஏற்கனவே முடிவடைந்துவிட்டன. சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட போதிலும் அனைத்து பேருந்துகளிலும் கூட்டம் நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டுள்ளது.



 
 
இந்த நிலையில் தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக முன்பதிவு இல்லாத சிறப்பு ரயிலை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
 
இந்த ரயில் சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு வரும் செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு கிளம்பும். இதே போல் தீபாவளி தினத்தை கொண்டாடிவிட்டு மீண்டும் சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக இதே ரயில் நெல்லையில் இருந்து சென்னை எழும்பூருக்கு வரும் வெள்ளிக்கிழமை காலை 7.20 மணிக்கு இயக்கப்படும். இந்த ரயிலிலும் முன்பதிவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.