Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சிலை வைக்கிறதெல்லாம் அஜித்துக்கு சுத்தமா பிடிக்காது: சிவா

ajith statue" width="600" />
sivalingam| Last Modified புதன், 2 ஆகஸ்ட் 2017 (23:07 IST)
கடந்த இரண்டு நாட்களாகவே அஜித்துக்கு சிலை வைப்பது குறித்த செய்திகள் இணையதளங்களிலும் செய்தி ஊடகங்களிலும் பரபரப்பாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. நெல்லையில் ரூ.5 லட்சம் மதிப்பில் சிலையுடன் நூலகமும், கும்பகோணத்தில் ரூ.1 லட்சம் செலவில் சிலையும் அவரது ரசிகர்கள் வைக்கவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.


 
 
இந்த நிலையில் அஜித்தின் பிரியத்துக்குரிய இயக்குனர் சிவாவிடம் இந்த சிலை விவகாரம் குறித்து கேட்டபோது, 'சிலை வைப்பதெல்லாம் அஜித்துக்கு சுத்தமா பிடிக்காது. அவர் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அம்மா, அப்பா, செய்யும் தொழில் இதை மூன்றையும் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும்
 
ரசிகர்களாக இருந்தாலும் சரி, தனது படத்தை பார்க்க வருபவர்கள் யாராக இருந்தாலும் சரி, படத்தை பார்த்து அதில் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் தங்களுடைய சொந்த வாழ்க்கையில் எடுத்து கொண்டு கடைபிடிக்க வேண்டும் என்பதுதான். இதைவிட்டு சிலை வைப்பதை அவர் கண்டிப்பாக விரும்ப மாட்டார்' என்று கூறினார். அஜித் ரசிகர்களுக்கு இது எப்போது புரியும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :