Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

5 லட்சம் புத்தகங்கள் நடுவில் அஜித் வெண்கல சிலை: ரசிகர்கள் திட்டம்


sivalingam| Last Modified செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (22:42 IST)
தல அஜித் ரசிகர்கள் அவருடைய பிறந்த நாளின்போது ஒவ்வொரு வருடமும் அனாதை இல்லங்கள், முதியோர் இல்லம் ஆகியவற்றுக்கு சென்று உதவி செய்து வருவது வழக்கமே. தற்போது அடுத்தகட்டமாக மாணவர்களுக்கு பயன் தரும் வகையில் நூலகம் ஒன்றை கட்ட முடிவு செய்துள்ளனர்.


 
 
நெல்லை அருகே உள்ள தேவர்குளம் என்ற பகுதியில் 5 ஏக்கர் நிலத்தில் 5 லட்ச ரூபாய் செலவில் நூலகம் கட்ட இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. நூலகத்தின் நுழைவு வாயிலில் அஜித்தின் 7 அடி உயர வெண்கல சிலையையும் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது
 
நூலகம், சிலை இரண்டையும் அடுத்த வருடம் மே மாதம் 1ஆம் தேதி அதாவது அஜித்தின் பிறந்த நாள் அன்று திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாம். இந்த திறப்பு விழாவுக்கு அஜித்தை அழைக்க திட்டமிட்டுள்ளதாகவும், அஜித் கண்டிப்பாக வருவார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் நெல்லை மாவட்ட அஜித் ரசிகர் மன்ற தலைவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அஜீத் ரசிகர்களின் இந்த அரிய சேவை தொடர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :