டி.டி.வி தினகரனுக்கு அரசியல் எதிர்காலம் இல்லை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

rajendrabalaji
சினோஜ்கியான்| Last Updated: புதன், 11 செப்டம்பர் 2019 (17:13 IST)
தமிழகத்திலிருந்து அமெரிக்கா, துபாய், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்குச் சுற்றுலா சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மீது  ஸ்டாலின், தினகரன் உள்பட பல்வேறு எதிர்கட்சி தலைவர்கள் விமர்சனத்தை முன்வைத்தனர். 
முதல்வரின் இந்த சுற்றுலாப் பயணத்தின்போது,  வெளிநாட்டிலிருந்து முதலீடுகளை ஈர்த்து வருவோம் - எனத் தான் கூறியபடி,  ’தமிழகத்திற்கு ரூ, 8,830 கோடி அளவிளான முதலீடுகளுக்காக சுமார் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அவரால் கையெழுத்தாகி உள்ளது. இதன் மூலம் பல்லாயிரக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது’ என முதல்வர் தெரிவித்துள்ளார். 
 
இந்த நிலையில், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டது குறித்து அ.ம.மு.க., தலைவர் டிடிவி தினகரன் விமர்சித்து கூறியுள்ளதாவது : 
dinakaran
வெளிநாடுகளுக்குச் சுற்றுலாப் பயணம் சென்ற முதல்வரும், அமைச்சர்களும் முதலீடுகளை ஈர்த்து வந்துள்ளதாகக் கூறுகின்றனர். முதலில் அந்த முதலீடுகள் அனைத்தும் தமிழகத்துக்கு வரட்டும் !அதன் பிறகு பார்க்கலாம் . முதல்வர் வெளிநாடு சென்றதை எதிர்க்கட்சிகள்  வெள்ளை மனதுடன் பார்க்க வேண்டுமெனக் கூறுகின்றனர்.
 
எதிர்க்கட்சிகளும், முதல்வரின் வெளிநாடு பயணம் குறித்து வெள்ளை அறிக்கை தான் கேட்கிறோம். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அகம்பாவத்தில் பேசுவதாகவும்  கூறினார்.

மேலும், அமமுக.,வை விட்டுச் செல்லும் பலரும் துரித பதவிக்காகச் செல்கிறார்கள் என அவர்கள் மீது குற்றம் சாட்டினார்.

 
தினகரனின் இந்தக் கருத்து குறித்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, தினகரன் கட்சியை விட்டு பலரும் வெளியேறுகிறார்கள்... தினகரனுக்கு அரசியல் எதிர்காலம் இல்லை எனத் தெரிவித்தார்.
 
அண்மையில் , அமமுக கொள்கைப் பரப்புச் செயலாளர், தங்க தமிழ்ச்செல்வன் அக்கட்சியிலிருந்து வெளியேறி, திமுகவில் இணைந்தார் என்பது அரசியலில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன், வீடியோ ஒன்றை வெளியிட்ட அமமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி, அதில் தினகரனை விமர்சித்துப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 


இதில் மேலும் படிக்கவும் :