ரஜினி அரசியலுக்கு வந்தாலும் அதிமுக - திமுக இடையே தான் போட்டி: வளர்மதி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தாலும் அதிமுக-திமுக இடையே தான் போட்டி இருக்கும் என முன்னாள் அமைச்சர் வளர்மதி தெரிவித்துள்ளார். இன்று ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த வளர்மதி, ரஜினி அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், ‘ரஜினிகாந்த் ஒரு சிறந்த நடிகர், நல்ல மனிதர். அவர் அரசியலுக்கு வரட்டும். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அவர் அரசியலுக்கு வருவதை நாங்கள் வரவேற்கின்றோம்.
ஆனால் ரஜினி அரசியல் கட்சி ஆரம்பித்து, மக்களையும் தேர்தலையும் சந்தித்த பின்னரே அவருக்கு மக்களிடம் இருக்கும் செல்வாக்கு தெரிய வரும். இப்போது எதுவும் சொல்ல முடியாது’ என்று கூறினார். மேலும் இதற்கு முன்னாள் பல நடிகர்கள் அரசியலுக்கு மிக வேகமாக வந்து, வந்த வேகத்திலேயே காணாமல் போய்விட்டனர். அவர்கள் பெயரைக்கூட நான் சொல்ல விரும்பவில்லை.
எங்களை பொருத்தவரை அதிமுகவுக்கு எதிரிக்கட்சி திமுக மட்டுமே. தேர்தல் அரசியலில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே தான் போட்டி’ என்று கூறினார். மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி உண்டா? என்ற கேள்விக்கு ‘அதிமுக கூட்டணியில் இணையும் கட்சிகள் குறித்து முடிவெடுப்பது முதல்வர், துணை முதல்வர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் தான். நான் இதுகுறித்து கருத்து கூற முடியாது’ என்று தெரிவித்தார்.