புதன், 18 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : ஞாயிறு, 3 நவம்பர் 2024 (06:16 IST)

இறக்குமதி ஐட்டம்: ஷைனாவிடம் மன்னிப்பு கேட்ட உத்தவ் சிவசேனா எம்.பி

இறக்குமதி ஐட்டம் என பெண் வேட்பாளரை தர குறைவாக விமர்சனம் செய்த உத்தவ் தாக்கரே கட்சியின் எம். பி. அரவிந்த் மன்னிப்பு கேட்டதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 மகாராஷ்டிரா மாநிலத்தில் நவம்பர் 20ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக செய்தி தொடர்பாளராக இருந்த பெண் தலைவர் ஷைனா என்பவர் வேட்பு மனுதாக்கலுக்கு ஒரு நாளுக்கு முன்பாக திடீரென ஷிண்டே சிவசேனா கட்சியில் இணைந்தார். அவருக்கு மும்பா தேவி என்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில், எம். பி. அரவிந்த் சாவந்த் இதுகுறித்து கூறியபோது, ஷைனா  ஒரு இறக்குமதி  ஐட்டம் என்றும், மும்பா தேவிக்கு தொடர்பு இல்லாத ஒருவருக்கு சீட் கிடைத்துள்ளதாகவும் விமர்சனம் செய்தார். 
 
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அரவிந்த் சாவந்த் மன்னிப்பு கேட்டு உள்ளார். யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கம் தனக்கு இல்லை என்றும், ஒரு பெண்ணை அவமதித்துவிட்டேன் என்றும், என் வாழ்நாளில் இப்படி யாரையும் நான் விமர்சனம் செய்ததில்லை; நான் ஆபாச அர்த்தத்தில் பேசவில்லை. எனது பேச்சு யாருடைய மனதையாவது புண்பட்டு இருந்தால் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
 
 
 
Edited by Mahendran