Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தேர்தல் ஆணையம் கொடுத்த குக்கர் சின்னம் - தினகரன் ரியாக்‌ஷன் என்ன?

Last Modified வெள்ளி, 8 டிசம்பர் 2017 (10:38 IST)
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு பிரஷர் குக்கர் சின்னம் வழங்கப்பட்டுள்ளது.


 
டிடிவி தினகரன் தனக்கு தொப்பி சின்னம் வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் இதே சின்னத்தை மேலும் 29 சுயேட்சை வேட்பாளர்கள் கேட்டதால் தினகரனுக்கு தொப்பி கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்தது.  
 
அந்நிலையில், தினகரனுக்கு புதிய சிக்கல் ஒன்று ஏற்பட்டது. அதாவது, கொங்கு முன்னேற்ற கழகம், தேசிய மக்கள் சக்தி, எழுச்சி தமிழர்கள் முன்னேற்ற கழகம் ஆகிய மூன்று கட்சிகளும் தங்களுக்கு தொப்பி சின்னம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு சின்னத்தை ஒதுக்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துவிட்டது. 
 
எனவே, தொப்பி சின்னம் வேண்டும் என்ற தினகரனின் கோரிக்கையை தேர்தல் அதிகாரி நிராகரித்தார். மேலும் தொப்பி சின்னம் கொங்கு முன்னேற்ற கழக வேட்பாளருக்கு வழங்கப்பட்டது. அதோடு, தினகரன் கோரியிருந்த தொப்பி, விசில், கிரிக்கெட் மட்டை ஆகிய மூன்று சின்னமும் மற்றவர்களுக்கு வழங்கப்பட்டதால், டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.
 
இதுபற்றி கருத்து தெரிவித்த தினகரன் “ஆர்.கே.நகரில் எந்த சின்னம் கிடைத்தாலும் நான் வெற்றி பெறுவேன். எதிரிகளுக்கு பிரஷர் கொடுக்கவே பிரஷர் குக்கர் சின்னத்தை கேட்டு வாங்கியிருக்கிறேன்.இந்த சின்னம் பெண்களின் சின்னம். இந்த சின்னத்தில் போட்டியிட்டு நான் வெற்றி பெறுவேன்” என நான் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :