1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 8 டிசம்பர் 2017 (10:13 IST)

கணவனை கொன்று செப்டிக் டேங்கில் மறைத்து வைத்த மனைவி

மும்பையைச் சேர்ந்த பெண் தனது கணவரை கொன்று, வெளியில் யாருக்கும் தெரியாமல் இருக்க கணவரின் உடலை 13 ஆண்டுகளாக செப்டிக் டேங்கில் மறைத்து வைத்திருந்தது இப்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த சவிதா பாரதி(46) என்ற பெண் பல வருடங்களாக பாலியல் தொழில் செய்து வந்துள்ளார். இதுகுறித்து 13 ஆண்டுகளுக்கு முன் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று சண்டை முற்றிப்போகவே தனது கணவனை கட்டையால் அடித்து கொன்றுவிட்டு, வெளியில் யாருக்கும் தெரியாமல் இருக்க உடலை செப்டிக் டேங்கில் மறைத்துள்ளார்.
 
சில நாட்களுக்கு முன்பு மும்பை காந்திபடாவில் பெண் ஒருவர் விபச்சாரம் செய்து வருவதாக வந்த புகாரின் பெயரில் பாரதி கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின, தனது கணவனை கொன்று 13 ஆண்டுகளாக  செப்டிக் டேங்கில் மறைத்து வைத்திருப்பதாகவும், மேலும் இதேபோல் 2 பேரையும் கொலை செய்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.