Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தஷ்வந்தை என்கவுண்டர் செய்ய முடிவா?

Last Modified வெள்ளி, 8 டிசம்பர் 2017 (10:31 IST)
சிறுமி ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த, பெற்ற தாயை நகைக்காகவும் பணத்திற்காகவும் கொலை செய்த கொடூரன் தஷ்வந்த் நேற்று மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை கொண்டு வர முயற்சித்த நிலையில் திடீரென போலீசாரிடம் இருந்து தப்பிவிட்டான்.

தஷ்வந்த் உண்மையிலேயே தப்பிவிட்டானா? அல்லது என்கவுண்டர் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதா? என சமூக வலைத்தளங்களில் சந்தேகத்தை ஒருசிலர் கிளப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் தஷ்வந்த் தந்தை சேகர் தற்போது சென்னை காவல்துறையின் விசாரணையில் உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சொத்தை விற்று, மகனை ஜாமீனில் எடுத்ததாகவும், அதனால் தான் அவன், தாயையே கொலை செய்து விட்டு போலீஸ் கண்ணில் மண்ணை தூவியும் தப்பியுள்ளதாகவும் சேகர் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தஷ்வந்த்தை உயிருடன் பிடிக்க மேலும் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், மாங்காடு காவல் ஆய்வாளர் கிருஷ்ணகுமார் தலைமையிலான இந்த கூடுதல் தனிப்படை தப்பியோடிய தஷ்வந்தை உயிருடன் பிடிக்க, சென்னையில் இருந்து
மும்பை விரைந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.இதில் மேலும் படிக்கவும் :