5 வது நாளாக தொடரும் டெல்லி முதல்வரின் போராட்டம்: பெருகும் ஆதரவு

cm
Last Modified வெள்ளி, 15 ஜூன் 2018 (09:51 IST)
டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் 5வது நாளாக இன்று ஆளுநர் இல்லத்தில் உள்ளிருப்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால் துணைநிலை கவர்னருக்கு அதிக அதிகாரம் உள்ளது. இதை பயன்படுத்திக்கொண்டு ஆளும் அரசு செயல்படுத்தும் திட்டங்களை, மத்திய அரசு முடக்கி வருகிறது என்ற குற்றச்சாட்டி இருந்து வருகிறது. 
 
அரசின் திட்டங்களை செயல்படுத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மறுக்கிறார்களாம். அதோடு, தலைமைச்செயலாளர் தாக்கப்பட்ட விவகாரத்துக்கு பிறகு, அமைச்சர்களுடனான கூட்டத்தையும் ஐஏஎஸ் அதிகாரிகள் புறக்கணித்து வருகின்றனர். 
 
இதனால், ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தி இருந்தார்.
 
மேலும் ஆளுனரை நேரில் சந்திக்க நேரம் கேட்டிருந்தார் கெஜிர்வால். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா மற்றும் அமைச்சர்கள் சத்தியேந்திர ஜெயின், கோபால் ராய் உள்ளிட்டோர் டெல்லி துணை நிலை ஆளநர் அனில் பாய்ஜல் இல்லத்தின் விருந்தினர் அறையில் தொடர்ந்து 5வது நாளாக உள்ளிருப்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
அரவிந்த் கெஜ்ரிவாலின் போராட்டத்துக்குப் பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :