ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 16 ஜூன் 2018 (13:26 IST)

அத்துமீறும் போலீஸார்: பயத்தில் கோவிலில் தங்கும் தூத்துக்குடி பெண்கள்!

தூத்துக்குடியில் கடந்த மாதம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது 13 பேர் சுட்டுக்கொள்ளப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
இந்த பரபரப்பு தணிவதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இணைய சேவை நிறுத்தப்பட்டது. பின்னர் ஒருசில நாட்களில் இயல்புநிலை திரும்பிய பின்னர், பாதுகாப்பிற்காக குவிக்கப்பபட்டிருந்த காவல்துறையினர் அங்கிருந்த வெளியேறினர்.  
 
ஆனாலும், ஸ்டெர்லைட் ஆலையை சுற்றிலும் உள்ள கிராமப் பகுதிகளில், நள்ளிரவு நேரங்களில் காவல்துறையினர் வீடுவீடாக சென்று ஆண்களை மிரட்டியும் கைது செய்தும் வருகிறார்களாம்.  
 
காவல்துறையினரின் இந்த அத்துமீறலால் மடத்தூர் கிராம பகுதியை சேர்ந்த பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் ஊர்க்கோயிலில் தங்கி வருகின்றனர். 
 
இதுகுறித்து அக்கிராமத்து பெண்கள், ஊருக்குள் போலீஸார் வருகின்றனர். விசாரணைக்கு வரும்படியும் வீடுகளில் புகுந்து ஆண்களை இழுத்தும் செல்கின்றனர். இரவில் வீடுகளில் தங்கவே மிகவும் பயமாக உள்ளது என கூறியுள்ளனர்.