திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 23 அக்டோபர் 2017 (17:37 IST)

கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளித்த குடும்பத்தினர்: மூன்று பேர் பலி!!

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


 
 
நெல்லை மாவட்டத்தில் கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தில் உள்ள 4 பேர் இன்று காலை நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து இது குறித்து புகார் அளித்தனர். 
 
அதன் பின்னர், நான்கு பேரும் திடீரென ஆளுக்கொரு பக்கம் நின்று தீக்குளித்து பரபரப்பு ஏற்படுத்தினர். இதனையடுத்து இசக்கி முத்து - சுப்புலட்சுமி தம்பதியர் தங்களின் இரண்டு குழந்தைகளுடன் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
 
ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இரு குழந்தைகளும் சுப்புலட்சுமியும் மரணம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.