1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 16 டிசம்பர் 2017 (08:13 IST)

டெங்கு பாதிப்பில் தமிழகம் முதலிடம்; மத்திய சுகாதாரத்துறை

மத்திய சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் இந்திய அளவில் டெங்கு பாதிப்புக்குள்ளான மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.  
வருடத்திற்கு வருடம் டெங்குவால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையும், அதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. டெங்கு என்பது ஒருவரின் உயிரையே பறிக்கக்கூடிய ஒரு கொடிய நோயாகும். இந்நோய் ஏடிஸ் ஏகிப்டி(AEDES AEGYPTI) என்ற ஒரு வகை கொசுவால் பரப்பப்படுகிறது.
 
2014-ம் ஆண்டில் டெங்கு காய்ச்சலுக்கு  2 ஆயிரத்து 804 பேரும், 2015-ம் ஆண்டில் 4 ஆயிரத்து 535 பேரும், 2016-ம் ஆண்டில் 2 ஆயிரத்து 531 பேரும் டெங்குவால் பாதிப்படைந்துள்ளனர். ஆனால் 2017 ஆம் ஆண்டில்  தமிழகத்தில் ஏற்பட்ட டெங்கு காய்ச்சலால் 21 ஆயிரத்து 350 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த பாதிப்பு நாட்டிலேயே மிக அதிக அளவாகும். எனவே தமிழகம் தான் டெங்கு பாதிப்புக்குள்ளான மாநிலங்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.