Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தமிழகத்தை நோக்கி சாகர் புயல்: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!!

Last Modified சனி, 2 டிசம்பர் 2017 (16:28 IST)
சமீபத்தில் வங்கக்கடலில் தோன்றிய ஓகி புயல் குமரி மாவட்டத்தை புரட்டி போட்டு கேரளாவையும் ஒரு கை பார்த்துள்ள நிலையில் தற்போது தெற்கு அந்தமான் பகுதியில் வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஒன்று உருவாகியுள்ளது.

தெற்கு அந்தமான் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுந்த தாழ்வு பகுதி, வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயல் உருவாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.


இது தொடர்பாக சென்னை வானிலை மைய ஆய்வு இயக்குனர் பாலசந்திரன் கூறியதாவது, தென் மேற்கு வங்க கடல் பகுதியில் தமிழ்க கரைக்கு அப்பால், மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதே போல் தெற்கு அந்தமான் பகுதியில் வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி நிலைத்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று புயலாக மார அதிக வாய்ப்புள்ளது. இது டிசம்பர் 6 ஆம் தேதிவாக்கில் வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழ்கம் மற்றும் தென் ஆந்திர கரையை நோக்கி நகரக்கூடும் என எச்சரித்துள்ளார்.


இதன் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழையுடன் கூடிய புயல்காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் உருவாகினால் இதர்கு சாகர் என பெயரிடப்படுமாம். சாகர் என்பதற் கடல் என்று பொருள். புயலுக்கு இந்த பெயரை இந்தியா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :