ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Updated : வெள்ளி, 10 நவம்பர் 2017 (12:26 IST)

சோப்பு போட்டு குளித்தால் 6 ஆண்டு ஜெயில்: கேரளா அதிரடி உத்தரவு

நவம்பர் 17ஆம் தேதி தமிழ்மாதம் கார்த்திகை பிறப்பதால் அன்றைய தினம் முதல் சபரிமலை ஐயப்பனுக்கு பக்தர்கள் மாலை போடுவது வழக்கம். அதேபோல் சபரிமலை கோவிலுக்கு செல்பவர்கள் மலை ஏறுவதற்கு முன்னர் பம்பை ஆற்றில் குளிப்பதை புனிதமாக கருதுவண்டு



 
 
ஆனால் அதே நேரத்தில் பம்பை ஆற்றில் சோப்பு, ஷாம்பு, சிகைக்காய் போன்றவற்றை பயன்படுத்தி பக்தர்கள் குளித்து வருவதால் பம்பை ஆறு அசுத்தமாகி சுற்றுச்சூழலை கெடுக்கின்றது. இதனை தடுக்கும் நோக்கில், இந்த ஆண்டு பத்தணந்திட்டா மாவட்ட நிர்வாகம் சோப்பு, ஷாம்பு, எண்ணெய் ஆகிவயற்றை பயன்படுத்த பக்தர்களுக்கு தடை விதித்துள்ளது. இதனை மீறும் பக்தர்களுக்கு ஆறு ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்றும் பத்தணந்திட்டா மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
 
இந்தியாவில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்கள் கேரளாவின் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் கெடாமல் இருக்க ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் பத்தணந்திட்டா மாவட்ட நிர்வாகம் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.