சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் செல்லலாமா? சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு


sivalingam| Last Modified வெள்ளி, 13 அக்டோபர் 2017 (11:02 IST)

கேரளாவின் புனிதமான சபரிமலை கோவிலுக்குள் 10 வயதுக்கு மேற்பட்ட 50 வயதுக்குட்பட்ட பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனை எதிர்த்து இளம் வழக்கறிஞர்கள் சங்கம் என்ற அமைப்பு நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்தது.

 


இந்த வழக்கின் விசாரணை கடந்த சில மாதங்களாக காரசாரமாக நடைபெற்ற நிலையில் அக்டோபர் 13ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இதனையடுத்து பெண்களுக்கு சபரிமலை கோவிலில் தரிசனம் செய்ய அனுமதி கிடைக்குமா? என்பதை தெரிந்து கொள்ள இன்று சுப்ரீம் கோர்ட் வளாகத்தில் ஏராளமானோர் குவிந்திருந்தனர். ஆனால் சற்றுமுன் சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது. இதன்படி இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கை மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும், அந்த அமர்வே இந்த வழக்கின் தீர்ப்பை வெளியிடும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :