திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 16 அக்டோபர் 2017 (13:10 IST)

வெளுத்து வாங்கிய எடப்பாடி ; தெறித்து ஓடிய செல்லூர் ராஜூ

தொடர்ந்து சர்ச்சையான கருத்துகளை தெரிவித்து வந்த அமைச்சர் செல்லூர் ராஜு தற்போது செய்தியாளர்களை பார்த்தாலே தெறித்து ஓடுகிறாராம்.


 

 
தெர்மாக்கோல் விவகாரத்தில் சிக்கி நகைச்சுவையாக சித்தரிக்கப்பட்டு வருபவர் அமைச்சர் செல்லூர் ராஜூ. அந்த சம்பவத்திற்கு பின் சமூக வலைத்தளங்களில் அவரைப் பற்றிய மீம்ஸ்கள் ஏராளமாக வலம் வருகிறது. 
 
அப்போலோவில் ஜெ.வை நாங்கள் யாரும் பார்க்கவில்லை என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூற,  நாங்கள் அனைவரும் ஜெ.வை பார்த்தோம் என பேட்டி கொடுத்தார் செல்லூர் ராஜூ.
 
அதன்பின் இந்த ஆட்சி அமைய காரணமே சசிகலாதான். ஆனால், சூழ்நிலை காரணமாக அமைதியாக இருக்கிறேன் எனக் கூறி எடப்பாடி அணிக்கு கோபத்தை உண்டாக்கினார். எனவே, தினகரன் கூறிய ஸ்லீப்பர் செல் அவர்தான் என கருத்து எழுந்தது. ஆனால், நான் ஸ்லீப்பர் செல் இல்லை என செல்லூர் ராஜு மறுப்பு தெரிவித்தார். 


 

 
அதேபோல், டெங்குவால் தமிழகத்தில் யாரும் இறக்கவில்லை என பேட்டியளித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். மேலும், மாட்டுச்சாணியை வீட்டின் முன்பு தெளித்தால் டெங்கு போன்ற நோய்கள் ஏற்படாது எனக்கூறி தமிழகத்தையே சிரிக்க வைத்தார். 
 
இவரின் அனைத்து பேட்டிகளும் சர்ச்சைகளுக்கும், கேலிக்கும் உள்ளானதால், கோபமடைந்த முதல்வர் பழனிச்சாமி செல்லூர் ராஜூவை அழைத்து டோஸ் விட்டதாக தெரிகிறது. இதையடுத்து, சமீபத்தில் மதுரையில் ஒரு விழாவிற்கு வந்த அவரை பேட்டியெடுக்க நிருபர்கள் குவிந்தனர். ஆனால், யாருக்கும் பேட்டியில்லை எனக்கூறி அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.