வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 13 அக்டோபர் 2017 (15:58 IST)

செல்லூர் ராஜுவுக்கு நோபல் பரிசு - ராமதாஸ் கிண்டல்

அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு நோபல் பரிசு தரப்பட வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கிண்டலடித்துள்ளார்.


 

 
தமிழகம் முழுவதும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் டெங்குவை கட்டுப்படுத்த நிலவேம்பு கசாயம் உள்பட பல்வேறு வழிகள் பின்பற்றப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில் நேற்று மதுரையில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியை  தொடங்கி வைத்த அமைச்சர் செல்லூர் ராஜூ, செய்தியாளர்களிடம் பேசிய போது “ஒவ்வொரு வீட்டு வாசலிலும் சாணம் தெளித்தால் வீட்டில் டெங்கு கொசு உள்பட எந்த கொசுவும் வராது. வாசலில் சாணம் தெளிப்பது நகரங்களில் சாத்தியமில்லை என்றாலும் கிராமத்தினர் இதை கடைபிடிக்கலாம்” என்று கூறினார்.
 
இதைத்தொடர்ந்து அவரை கிண்லடித்து பல மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில், டாக்டர் ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில்  “வாசலில் சாணம் தெளித்தால் டெங்கு கொசு வராது - செல்லூர் ராஜு. அறிவியல், மருத்துவம் அத்தனைக்குமான நோபல் இவருக்குத் தான் தர வேண்டும்” எனக் கிண்டலடித்துள்ளார்.
 
சாணம் ஒரு கிருமி நாசினி என்பது உண்மைதான் என்றாலும் டெங்கு கொசுவை அது கட்டுப்படுத்துமா என்பதை மருத்துவர்கள் தான் பொதுமக்களுக்கு விளக்க வேண்டும் என விவாதங்கள் எழுந்துள்ளது.