Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

எடப்பாடி ஆட்சியில் அங்கீகாரம் இல்லையா? - ஓ.பி.எஸ் பரபரப்பு பேட்டி

வியாழன், 12 அக்டோபர் 2017 (12:54 IST)

Widgets Magazine

தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ் இன்று காலை தனது ஆதரவாளர்களுடன் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார்.


 

 
துணை முதல்வர் மற்றும் கட்சி ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கொடுக்கப்பட்டவுடன், தர்ம யுத்தத்தை ரத்து செய்து விட்டு எடப்பாடி பழனிச்சாமி அணியில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்தார் ஓ.பி.எஸ். ஆனால், கட்சி மற்றும் ஆட்சி இரண்டிலுமே அவருக்கு சரியான அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என முன்பே செய்திகள் வெளியானது.
 
இதனால் அதிருப்தியடைந்த ஓ.பி.எஸ் தனது ஆதரவாளர்களான கே.பி.முனுசாமி மற்றும் மைத்ரேயன் உள்ளிட்டோரோடு நேற்று டெல்லி சென்றுள்ளார். அவர்கள் அனைவரும் இன்று பிரதமரை சந்தித்து தாங்கள் ஒதுக்கப்படுவது குறித்து முறையிடுகிறார்கள் என செய்திகள் வெளிவந்துள்ளது.
 
பிரதமர் சந்திப்பிற்கு பின் பேட்டியித்த ஓ.பி.எஸ்-ஸிடம் இதுபற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் “எனக்கும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இடையேயும் எந்த பிரச்சனையும் இல்லை. தமிழகத்திற்கு தேவையான மின்சாரம் தொடர்பாகவே பிரதமரை சந்தித்து பேசினோம். மற்றவர்களின் ஊகங்களுக்கெல்லாம் நான் பதில் கூற முடியாது. இந்த ஆட்சி தொடரும். தற்போதுள்ள அதிமுகவில் எந்த பிளவும் ஏற்படாது. எல்லா அமைச்சர்களுடனும் கலந்து ஆலோசித்த பின்பே முதல்வர் முடிவெடுக்கிறார். எங்களுக்கு சரியாக அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்பது பொய்யான செய்தி” என அவர் தெரிவித்தார்.
 
அப்போது ஒரு நிருபர், தினகரனை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்வீர்களா? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஓ.பி.எஸ், இனிமேல் கட்சியின் அடிமட்ட நிலையிலிருந்து வருபவர்களுக்கே பதவிகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஜெமினி மேம்பாலத்தில் பட்டப்பகலில் நடந்த செயின்பறிப்பு: போலீசார் அதிர்ச்சி

எப்போதும் பிசியாக இருக்கும் சென்னையின் முக்கிய பகுதியான ஜெமினி மேம்பாலத்தில் பட்டப்பகலில் ...

news

அரசு மருத்துவமனையில் டெங்கு நோயாளிகளை சந்திக்க பிரேமலதாவுக்கு அனுமதி மறுப்பு

தமிழகமெங்கும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பலர் உயிரிழந்தும் வருகின்றனர். ...

news

மதிப்பெண் குறைந்தால் பெற்றோருக்கு அபராதம்: அடாவடி உத்தரவு போட்ட பள்ளி நிர்வாகம்

ஒரு மாணவர் சரியாக படிக்காமல் மதிப்பெண் குறைவாக எடுத்தால் அந்த மாணவனுக்கு தண்டனை ...

news

பூமியை கடக்கும் விண்கல்: ஆபத்துகள் குறித்த அலசல்...

DC4 என பெயரிடப்பட்டுள்ள விண்கல் இன்று பூமியை கடக்கவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Widgets Magazine Widgets Magazine