புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 4 ஜனவரி 2020 (10:57 IST)

திமுக நாடகத்தை மக்கள் விரும்புகிறார்கள்! – தேர்தல் குறித்து சீமான்!

உள்ளாட்சி தேர்தலில் திமுக பல இடங்களில் வெற்றிப்பெற்றது குறித்து பேசிய சீமான் திமுக நாடகத்தை மக்கள் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

தமிழக ஊராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. ஆளுங்கட்சியான அதிமுக கணிசமான வித்தியாசத்தில் திமுகவை விட குறைவான இடங்களை பெற்றுள்ளது. ஒன்றிய தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றிப்பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று வேலப்பஞ்சாவடியில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட இருக்கிறது. அதில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் “ஒன்றியத்தில் ஒரு இடம் கிடைத்ததால் நாம் தமிழர் பின்தங்கி விடவில்லை. கடந்த முறை 4 சதவீதமாக இருந்த வாக்குகள் இந்த முறை 10 சதவீதமாக உயர்ந்திருக்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி குறித்து பேசிய சீமான் ”திமுகவின் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான நாடகங்களை மக்கள் விரும்புகிறார்கள். வாஜ்பாய் ஆட்சியில் இந்த சட்டம் முதன்முதலாக அமலுக்கு வந்தபோது பாஜகவோடு கூட்டணியில் இருந்தவர்கள் திமுகதான். அப்போது ஏன் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை” என கேள்வி எழுப்பியுள்ளார்.