புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 4 ஜனவரி 2020 (09:29 IST)

ரேசன் கடைகளுக்கு விடுமுறை இல்லை: பொங்கல் பை விநியோகம் தீவிரம்!

உள்ளாட்சி தேர்தலுக்காக பல பகுதிகளில் பொங்கல் பை வழங்கப்படாத நிலையில் தற்போது விநியோகத்தை தீவிரப்படுத்தியுள்ளது தமிழக அரசு.

தமிழகத்தில் ஜனவரி 15ம் தேதி பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் பொங்கலுக்கு சில நாட்கள் முன்பே அரிசி, வெல்லம் மற்றும் பொங்கல் வைக்க தேவையான சமையல் பொருட்கள் மற்றும் ஆயிரம் ரூபாய் பணமும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பொங்கல் பை மற்றும் பணம் வழங்கும் திட்டத்தை கடந்த டிசம்பர் மாதமே முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். ஆனால் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கும் பகுதிகளில் பொங்கல் பை வழங்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது.

தற்போது உள்ளாட்சி தேர்தல் முடிந்து விட்டதால் பொங்கல் பை விநியோக பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் வழக்கமாக மாதத்தின் இரண்டாம் வெள்ளிக்கிழமைகளில் ரேசன் கடைகளுக்கு வழங்கப்படும் விடுமுறை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 10ம் தேதிக்கு பதிலாக 17ம் தேதி விடுமுறை ரேசன் கடைகளுக்கு விடுமுறை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.