செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 12 பிப்ரவரி 2018 (13:34 IST)

தினகரன் எம்எல்ஏகளுடன் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ரகசிய பேச்சுவார்த்தை?

ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவரும் தினகரன் தரப்பினரிடம் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 
டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த 18 எம்எல்ஏக்களை பேரவைத்தலைவர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். இதனையடுத்து 18 எம்எல்ஏகள் தகுதி நீக்கத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
 
இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் எந்த நேரத்திலும் தீர்ப்பு வழங்கலாம். அப்படி தீர்ப்பு தினகரன் எம்எல்ஏகளுக்கு சாதகமாக வந்தால் ஆட்சி இழக்க நேரிடம் என ஓபிஎஸ்-ஈபிஎஸ் கருதுகின்றனர்.
 
இதனால் தினகரன் தரப்பு ஆதரவு எம்எல்ஏகளிடம் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ரகசிய பேச்சுவார்த்தை  வருவதாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களில் ஒருவர் இன்று கூறினார்.