நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது - மத்திய அரசு அறிவிப்பு

Last Modified வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (17:12 IST)
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

 
சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது ஆங்கிலமே வழக்காடு மொழியாக இருக்கிறது. எனவே, வழக்கு விசாரணையை காணும் எளிய மக்களுக்கு வழக்கின் போக்கே புரியவில்லை. எனவே, தமிழை வழக்கு மொழியாக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
 
அதேபோல்,உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி 2006ம் ஆண்டு தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதை ஏற்கமுடியாது என 2012ம் ஆண்டிலேயே மத்திய அரசு தெரிவித்துவிட்டது.
 
இந்நிலையில், இதுபற்றி மாநிலங்களவை எம்.பி.சசிகலா புஷ்பாவின் கேள்விக்கு மத்திய இணையமைச்சர் சவுத்ரி எழுத்துப்பூர்வ பதில் தாக்கல் செய்தார். அதில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
 
இது தமிழ் ஆர்வலர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :