உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமனம்

Ramnath Govind
Last Updated: செவ்வாய், 6 பிப்ரவரி 2018 (21:10 IST)
கேரளா, கர்நாடகா, திரிபுரா, மணிப்பூர் மற்றும் மேகாலயா ஆகிய உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்தார்.

 
கேரளா, கர்நாடகா, திரிபுரா, மணிப்பூர் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் பதவிகாலம் முடிவடைய உள்ள நிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் பணி நியமனம் நடைபெற்றது.
 
மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி கர்நாடக மாநிலத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். கேரளா உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக அந்தோணி டோமினிக் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி அஜய் ராஸ்டோகி திரிபுரா மாநிலத்துக்கும், அலகாபாத் உயர்நீதிம்ன்ற நீதிபதி தருண் அகர்வால் மேகாலய மாநிலத்துக்கும், குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி அபிலாஷா குமாரி மணிப்பூர் மாநிலத்துக்கும் தலைமை நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :