Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

என்னை நம்பி வந்தோரை முதல்வராக்குவேன்: தினகரன்!

Last Modified செவ்வாய், 6 பிப்ரவரி 2018 (21:05 IST)
மீத்தேன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சையின் கதிராமங்கலத்தில் நடந்து வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க தினகரன் இன்று கதிராமங்கலத்துக்குச் சென்றார்.

அங்கு, மீத்தேன் எதிர்ப்புக் குழுவினருடன் பேசி அங்கு இருக்கும் சூழ்நிலையை பற்றி தெரிந்துக்கொண்டார். பின்னர் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டி பின்வருமாறு....

நாங்கள் இந்தப் பூமியை சேர்ந்தவர்கள். நாங்கள் நிம்மதியாக வாழ மீத்தேன் எடுக்கும் பணிகளை நிறுத்த வேண்டும். இந்தப் பகுதியை விவசாய மண்டலமாக அறிவிக்க வேண்டும் என பேசினார்.

மேலும், தேர்தல் நடந்தால் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும். எதிரணியில் உள்ள 6 பேரை ஒதுக்கிவிட்டு மீதமுள்ள எம்எல்ஏக்கள் எங்கள் பக்கம் வந்தாலும் ஆட்சி மாற்றத்துக்கு வாய்ப்புள்ளது.


எனக்கு முதல்வராக வேண்டும் என்ற ஆசை இல்லை. என்னோடு துணையாக நின்ற 18 தியாகிகளில் ஒருவரை முதல்வராக்குவேன். மீண்டும் தேர்தல் வர வேண்டாம் என நினைக்கும் எம்எல்ஏக்கள் எங்கள் பக்கம் மனம் திருந்தி வரலாம் என்றும் அழைப்பு விடுத்தார்.


இதில் மேலும் படிக்கவும் :