எடப்பாடி அணியில் சேர ரூ.20 கோடி லஞ்சம் - செந்தில் பாலாஜி புகார்


Murugan| Last Updated: புதன், 13 செப்டம்பர் 2017 (18:35 IST)
தினகரன் ஆதரவு எம்.எ.ஏக்களை தமிழக போலீசார் மிரட்டுவதாகவும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியில் சேர  பேரம் பேசுவதாகவும் செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ புகார் தெரிவித்துள்ளார்.

 

 
புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியிருந்த தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர்,  தற்போது கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் உள்ள ஒரு சொகுசு விடுதிக்கு மாறியுள்ளனர். 
 
அந்நிலையில், அந்த விடுதிக்கு நேற்று தமிழக போலீசார் சென்றனர். எம்.எல்.ஏக்கள் சுய விருப்பத்தில் தங்கியிருக்கிறார்களா அல்லது கட்டாயத்தின் பேரில் தங்கியிருக்கிறார்களா என அவர்கள் விசாரணை நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.
 
இந்நிலையில், அந்த விடுதியில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏக்களில் ஒருவரான செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது, அங்கு தங்கியிருக்கும் எம்.எல்.ஏக்களிடம், எடப்பாடி அரசை ஆதரிக்காவிட்டால் வழக்குகள் பாயும் என தமிழக போலீசார் மிரட்டுவதாகவும், அப்படி ஆதரவு தந்தால் ரூ.20 கோடி கொடுக்கப்படும் என பேரம் பேசினார்கள் எனவும் புகார் தெரிவித்தார்.
 
அதேபோல், தமிழக போலீசாரின் மிரட்டலையடுத்து, கர்நாடக காவல் துறையிடம் புகார் அளித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :