Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தாய்க்குச் செய்யும் துரோகம் இது: செந்தில் பாலாஜி ஆவேசம்!

தாய்க்குச் செய்யும் துரோகம் இது: செந்தில் பாலாஜி ஆவேசம்!


Caston| Last Updated: திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (09:51 IST)
அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் தற்போது தினகரன், சசிகலாவுக்கு எதிராக பகிரங்கமாக செயல்பட ஆரம்பித்துள்ளனர். இதனை தினகரன் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.

 
 
தினகரன், சசிகலா குடும்பத்தை அதிமுகவில் இருந்து முழுமையாக ஒழித்துவிட்டு ஓபிஎஸ் அணியை மீண்டும் அதிமுகவில் இணைத்து கட்சியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர எடப்பாடி பழனிச்சாமி அணி தீவிரமாக செயல்பட்டுவருகிறது.
 
இதனையடுத்து தினகரன் அணியில் உள்ள அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் எடப்பாடி அணியை விமர்சித்து வருகின்றனர். அரவக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ செந்தில் பாலாஜி தனக்கு அமைச்சர் பதவி வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமியிடம் பலமுறை முயற்சித்தார். பின்னர் அது நடக்காததால் தினகரன் அணியில் சேர்ந்தார். அவர் தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் இந்த தினகரன் எதிர்ப்பு நிலையை விமர்சித்துள்ளார்.
 
மேலூரில் இன்று நடைபெற உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்ட ஏற்பாட்டை நேற்று செந்தில் பாலாஜி பார்வையிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, கூவத்தூரில் சசிகலா மற்றும் தினகரன் கேட்டுக் கொண்டதால் தான் எடப்பாடி பழனிசாமியை 122 சட்டமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சராகத் தேர்வு செய்தோம்.
 
ஆனால் தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாடு தாய்க்குச் செய்யும் துரோகம் போன்று உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி அரசை கவிழ்க சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த ஓபிஎஸ் அணியுடன் தற்போது கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் என்ன? என அவர் கேள்வி எழுப்பினார்.


இதில் மேலும் படிக்கவும் :