Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

யாருக்கு ஆதரவு?; எம்.எல்.ஏக்களுடன் நாளை நேர்காணல் : முதல்வர் அதிரடி


Murugan| Last Updated: புதன், 30 ஆகஸ்ட் 2017 (16:07 IST)
பரபரப்பான அரசியல் சூழலில் அனைத்து அதிமுக எம்.எல்.ஏக்களும் நாளை சென்னை வர வேண்டும் என முதல்வர் எடப்பாடி தரப்பிலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

 
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அதில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
 
அந்த கூட்டத்திற்கு அனைத்து எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள், எம்.பிக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், 33 எம்.எல்.ஏக்கள், 35 அமைச்சர்கள் என மொத்தம் 68 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.  இதில் தினகரன் பக்கம் உள்ள 20 பேர் மற்றும் 3 கூட்டணி எம்.எல்.ஏக்களை கழித்தால், 112 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால், 68 பேர் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். 44 பேர் கலந்து கொள்ளவில்லை. எனவே, அவர்கள் ஏன் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் தினகரன் பக்கம் சாய உள்ளார்களா என்கிற சந்தேகம் எடப்படி தரப்பிற்கு வந்துள்ளதாக தெரிகிறது.
 
மேலும், தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என ஆளுநர் கை விரித்து விட்ட நிலையில், தினகரன் என்ன மாதிரியான முடிவுகளை எடுப்பார் எனத் தெரியாது. அதோடு, இன்று காலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தினகரன் ‘அவர்கள் பக்கம் எங்கள் ஸ்லீப்பர் செல் இருக்கிறார்கள். விரைவில் 40 எம்.எல்.ஏக்கள் எங்கள் பக்கம் வருவார்கள்’ எனக் கூறியிருந்தார்.  
 
எனவே, தினகரன் பக்கம் உள்ள எம்.எல்.ஏக்கள தவிர மற்ற எம்.எல்.ஏக்களின் ஆதரவு தனக்கு இருக்கிறதா எனத் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் முதல்வர் இருக்கிறார். எனவே, அனைத்து அதிமுக எம்.எல்.ஏக்களும் நாளை காலை 10 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வரவேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 
அந்தந்த மாவட்ட அமைச்சர்களுடன், மாவட்ட ரீதியாக எம்.எல்.ஏக்களுடன் எடப்பாடி பழனிச்சாமி கலந்துரையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எத்தனை எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்வார்கள் என்பது நாளையே தெரிய வரும்.


இதில் மேலும் படிக்கவும் :