Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரிசார்ட்டிலிருந்து வெளியேறிய 13 எம்.எல்.ஏக்கள் - எடப்பாடி அணியில் இணைகிறார்களா?


Murugan| Last Modified திங்கள், 4 செப்டம்பர் 2017 (11:44 IST)
புதுச்சேரி சொகுசு விடுதியில் தங்கியிருந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களில் பலர் அங்கிருந்து நேற்று வெளியேறிவிட்டனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

 

 
தன்னையும், சசிகலாவையும் அதிமுகவிலிருந்து ஒதுக்கி வைக்கும் முயற்சியில் ஒன்றிணைந்த அதிமுக அணி இறங்கியுள்ளதால், அதிருப்தியடைந்த தினகரன்  தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேரை பாண்டிச்சேரி சின்னவீராம் பட்டினத்தில் உள்ள விண்ட் ஃபிளவர் ரிசார்ட்டில் தங்க வைத்தார். அதன் பின் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 22 ஆகி விட்டது என செய்திகள் வெளியானட்து.
 
அந்நிலையில், எடப்பாடி தரப்பிலிருந்து சில எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு போயிருக்கிறது. அதேபோல், எடப்பாடி அணியில் இருக்கும் சில எம்.எல்.ஏக்களுக்கு, தினகரன் தரப்பில் இருந்து அழைப்பு போயிருக்கிறது. இப்படி இருபுறமும் எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.  ஏற்கனவே, விடுதியில் தங்கியிருக்கும் சில எம்.எல்.ஏக்கள் அணி மாறுவது குறித்து யோசித்து வருவதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தது.
 
அதோடு, தொடர்ந்து விடுதியிலேயே தங்கியிருப்பது சிலருக்கு மன உளைச்சலையும், சோர்வையும் ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது. சில பேர் வெளியே செல்ல வேண்டும் எனவும், சிலர் வீட்டிற்கு செல்ல வேண்டும் எனவும் கூறிவருவதாக தெரிகிறது. 
 
இந்நிலையில், ரிசார்ட்டிலிருந்த எம்.எல்.ஏக்களில் 13 பேர் நேற்று அங்கிருந்து வெளியேறிவிட்டனர் எனவும், தற்போது அங்கு 9 பேர் மட்டுமே தங்கியுள்ளனர் எனவும் கூறப்படுகிறது. அதேபோல், வெளியேறிய எம்.எல்.ஏக்கள் எடப்பாடி அணிக்கு தாவ முடிவெடுத்திருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், தங்கதமிழ்செல்வன் எம்.எல்.ஏ இதனை மறுத்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :