தேர்தல் நேரத்தில் மட்டும் சிலருக்கு கடவுள் தேவைப்படுகிறார்: குஷ்பு
இந்துமத பெண்களை அவதூறாக பேசியதாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடிகை குஷ்பு நடத்த திட்டமிட்டிருந்தார்
ஆனால் அவர் ஆர்ப்பாட்டத்திற்காக சிதம்பரம் சென்று கொண்டிருக்கும் வழியிலேயே போலீசாரால் கைது செய்யப்பட்டார் என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் சமீபத்தில் பாஜகவில் இணைந்த குஷ்பு தற்போது ஆவேசமாக அரசியலில் இறங்கி அதிரடியாக போராட்டங்களை நடத்தி ஊடகங்களில் தலைப்பு செய்திகளில் இடம்பெற்று வருகிறார்
ஏற்கனவே பல வருடங்களாக தமிழகத்தில் பாஜக இருக்கும் தலைவர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு தற்போது குஷ்பு அக்கட்சியில் முன்னேறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அவர் தமிழகத்தின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் தேர்தல் நேரத்தில் மட்டும் சிலருக்கு கடவுள் தேவைப்படுகிறார் என கடுமையாக குஷ்பு விமர்சனம் செய்துள்ளார். பெண்கள் மதிக்கப்படும் இடத்தில் கடவுள் இருப்பார் என்றும், மதிக்காத இடத்தில் கடவுள் இருக்க மாட்டார் என மனுதர்மத்தில் சொல்லியிருப்பது திருமாவளவனுக்கு ஏன் தெரியவில்லை என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் மனுதர்மம் குறித்து அவர் கூறிய போது ’3000 ஆண்டுகளுக்கு முன் இருந்த புத்தகம் குறித்து இப்போது திருமாவளவன் பேசுவது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்