திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 27 அக்டோபர் 2020 (10:01 IST)

திருமா வளவன் தொகுதியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்…நடிகை குஷ்பு கைது!

நடிகை குஷ்பு சிதம்பரம் தொகுதியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதை அடுத்து போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்து பெண்களை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக திருமாவளவன் மீது குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில் திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது . திருமாவளவனின் தொகுதியான சிதம்பரம் தொகுதியிலேயே நடிகை குஷ்பு மற்றும் சசிகலா புஷ்பா ஆகியோர் போராட்டம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

தடையை மீறி போராட்டம் நடத்த சென்ற குஷ்பு வழியிலேயே கைது செய்யப்பட்டார்.