திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 26 நவம்பர் 2024 (18:05 IST)

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

இன்று முதல் நவம்பர் 29ஆம் தேதி வரை தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் புயல் காரணமாக மிதமான மழை முதல் கனமழை வரையும் என்றும் சில இடங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
குறிப்பாக சில நிமிடங்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள 33 மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
புயல் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என்ற காரணத்தை அடுத்து பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. 
 
ஏற்கனவே விடுமுறை குறித்த அறிவிப்பை அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று இரவுக்குள் பெரும்பாலான மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் புதுச்சேரியில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என்றும் அதேபோல் காரைக்கால் பள்ளி கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை என்றும் புதுவை மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து தமிழகத்திலும் பள்ளி கல்லூரிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 
Edited by Mahendran