1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 27 அக்டோபர் 2020 (10:33 IST)

குஷ்பு கைதால் கண்டுகொள்ளப்படாத உதயநிதி ஸ்டாலின் போராட்டம்!

குஷ்பு கைதால் கண்டுகொள்ளப்படாத உதயநிதி ஸ்டாலின் போராட்டம்!
நடிகையும் பாஜக பிரபலமுமான குஷ்பு இன்று கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து கோவையில் இன்று உதயநிதி தலைமையில் நடைபெறும் போராட்டம் ஊடகங்களால் கண்டுகொள்ளப்படாமல் உள்ளது 
 
திருமாவளவனை கண்டித்து சிதம்பரம் சிதம்பரத்தில் போராட்டம் நடத்தச் சென்ற போது வழியிலேயே நடிகை குஷ்பு கைது செய்யப்பட்டார். இது குறித்து செய்திகள் அனைத்து ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன
 
இந்த நிலையில் கோவையில் முக ஸ்டாலினை கேலி செய்து ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களுக்கு கண்டனம் தெரிவித்து இன்று உதயநிதி ஸ்டாலின் கோவையில் போராட்டம் நடத்த உள்ளார். இதற்காக அவர் நேற்றே சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
திமுக இளைஞரணி செயலாளராக இருக்கும் உதயநிதி நடத்தப்போகும் இந்த போராட்டத்திற்கு ஊடகங்கள் பெரும் முக்கியத்துவம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று காலையிலேயே நடிகை குஷ்பு கைது செய்யப்பட்டதை அடுத்து அனைத்து ஊடகங்களும் குஷ்பு குறித்த செய்திகளை வெளியிட்டு, உதயநிதி போராட்டம் குறித்த செய்தியை கண்டுகொள்ளாமல் விட்டுள்ளதால் திமுகவினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.