ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 21 ஜனவரி 2019 (12:32 IST)

ரூ.1000 பொங்கல் பரிசை திருப்பி ஒப்படைத்த நபரால் பரபரப்பு

பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள ரேசன்கார்டு தாரர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசும், பொங்கலுக்கு தேவையான பொருட்களும் வழங்கப்பட்டது. ஒருசில குறிப்பிட்ட அட்டைதாரர்கள் தவிர இந்த பொங்கல் பரிசை அனைவரும் வரிசையில் காத்திருந்து வாங்கி சென்றனர்.

இந்த நிலையில் காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த ரவி என்பவர் தமிழக அரசால் கொடுக்கப்பட்ட பொங்கல் பரிசுகள் மற்றும் ரூ.1000ஐ மாவட்ட நிர்வாகத்திடம் திருப்பி ஒப்படைத்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக பாலாற்றில் தடுப்பனை கட்ட கோரிக்கை வைத்தபோது அதற்கு நிதியில்லை என்று கூறிய தமிழக அரசு, பொங்கல் பரிசாக ரூ.2548 கோடி வழங்கியதற்கு கண்டனம் தெரிவித்தே ரூ.1000 மற்றும் பொங்கல் பரிசை திருப்பி தந்ததாக ரவி தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாளில் நடந்த இந்த நிகழ்வால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது