5 மாத திட்டம்; 25அடிக்கு சுரங்கம்; அதிர்ச்சியளித்த நூதன கொள்ளையர்கள் கைவரிசை
மும்பையில் உள்ள பேங்க் ஆப் பரோடாவில் ஞாயிற்றுக்கிழமை கொள்ளையர்கள் நூதனமான முறையில் 25 அடிக்கு குழி தோண்டி கொள்ளையடித்து உள்ளனர்.
மும்பை ஜூனி நகரில் உள்ள பேங்க் ஆப் பரோடா கிளையில் நேற்று கொள்ளையர்கள் நூதனமான முறையில் கொள்ளையடித்து உள்ளனர். சினிமாவில் நடப்பது போல் சுரங்க பாதை தோண்டி கொள்ளையடித்து உள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்திற்கு பெரிய அளவில் திட்டம் தீட்டப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் மதிப்பை கணக்கிட்டு வருகின்றனர். இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வங்கியில் லாக்கர் இருக்கும் தரை பகுதி சுரங்கம் போல் தோண்டப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 30க்கும் அதிகமான லாக்கர் உடைக்கப்பட்டு இருந்தது. இந்த கொள்ளை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என் இரண்டு நாட்கள் இரவு நடைபெற்றுள்ளது.
இதற்காக கொள்ளையர்கள் ஐந்து மாதமாக திட்டமிட்டுள்ளனர். மேலும் சிசிடிவி கேமராவில் பதிவாகாத படி அனைத்து வேலைகளையும் செய்துள்ளனர். 225 லாக்கரில் 30 மட்டுமே கொள்ளையடிக்கப்பட்டு இருக்கிறது.