1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 31 அக்டோபர் 2017 (13:56 IST)

திருப்பதி வனப்பகுதியில் மீண்டும் என்கவுண்டர் நடக்கலாம்; ஐஜி எச்சரிக்கை

செம்மரங்கள் கடத்தல் தொடர்ந்தால் மீண்டும் திருப்பதி வனப்பகுதியில் என்கவுண்டர் நடக்கலாம் என செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி காந்தாராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


 

 
பாக்ராப்பேட்டை வனப்பகுதியில் நேற்று அதிகாலை காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, 20க்கும் மேற்பட்ட கும்பல் செம்மரங்களை கடத்தி கொண்டிருந்தனர். காவல்துறையினரை பார்த்ததும் கடத்தல்காரர்கள் கற்களை வீசிவிட்டு தப்பி ஓட முயன்றனர். அப்போது காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு அவர்களை சரணடையும் படி எச்சரித்தனர்.
 
ஆனால் அவர்கள் சிதறி ஓடி தப்பிவிட்டனர். கற்களை கொண்டு வீசி தாக்குதல் நடத்தியபோது காவலர் ஒருவர் காயமடைந்தார். கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் மட்டும் சிக்கிக்கொண்டார். அவரை காவல்துறையினர் கைது செய்தனர். 
 
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட செம்மர கடத்தல் பிரிவு ஐஜி காந்தாராவ் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:-
 
செம்மரம் கடத்தல் மேலும் தொடர்ந்தால் வேறு வழியின்றி திருப்பதி வனப்பகுதியில் மீண்டும் என்கவுண்டர் நடக்க வாய்ப்புகள் உள்ளன என்றார்.
 
கடந்த 2015ஆம் ஆண்டில் திருப்பதி சேஷாலம் பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர். தனியாக 4 பேர் என்கவுண்டர் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது ஐஜி காந்தாராவ் மீண்டும் அதுபோன்ற சம்பவம் நடக்க வாய்ப்புள்ளது என எச்சரித்துள்ளார்.