வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 11 மார்ச் 2018 (16:58 IST)

அரசியலுக்கு வந்துவிட்டேன்: ஐஏஎஸ் அதிகாரி சகாயம்

ஊழலை என்று எதிர்த்தேனோ அன்றே நான் அரசியலுக்கு வந்துவிட்டேன் என்று ஐஏஎஸ் அதிகாரி சகாயம் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னையில் விவசாயிகள் கருத்தரங்கம் ஒன்றில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியபோது, 'என்னுடைய சமூகம் என்றைக்கு விழிப்பு பெறுகின்றதோ, அன்றைக்கு வல்லமை பெறுகிறது என்று நான் நம்புகிறேன். நிச்சயமாக என்னுடைய சமூகம் விழிப்பு பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

இன்றைக்கு கூட என்னை பார்த்து நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று சொல்லுகிறீர்கள். என்றைக்கு நான் ஊழலை எதிர்க்க தொடங்கிவிட்டேனோ, அன்றைக்கே நான் அரசியலில் இருக்கின்றேன் என்று தான் அர்த்தம். அது தேர்தல் அரசியலா? என்பதை என்னுடைய சமூகம் முடிவு செய்யட்டும், அது முடிவு செய்கின்றபோது, விழித்தெழும்போது நிச்சயமாக ஒரு முடிவு பிறக்கும்' என்று ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்தார்.