Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அதிமுகவில் இருந்து திடீரென விலகிய இன்னொரு திரையுலக பிரபலம்

Last Modified புதன், 14 பிப்ரவரி 2018 (11:47 IST)
கடந்த சில மாதங்களாகவே அதிமுகவில் இருந்து திரையுலக பிரபலங்கள் விலகி வருவது தொடர்கதையாக உள்ளது. ஆனந்த்ராஜ், ராதாரவி, விந்தியா ஆகியோர் ஒருசில உதாரணங்கள்

இந்த நிலையில் மேடையை கடந்த சில ஆண்டுகளாக அலங்கரித்த புஷ்பவனம் குப்புசாமி அவர்களின் மனைவி அனிதா குப்புசாமி இன்று அதிமுகவில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளார்.

தன்னுடைய நல விரும்புகளும், ரசிகர்களும் கேட்டுக்கொண்டதற்கிணங்க அதிமுகவில் இருந்து விலகுவதாகவும், ஒருவேளை சசிகலா சிறை செல்லாமல் இருந்திருந்தால் அதிமுகவில் தொடர்ந்திருப்பேன் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் தான் வேறு எந்த அணியிலும் சேர விரும்பவில்லை என்றும் இனிமேல் பாடல்கள் பாடுவதில் மட்டும் கவனம் செலுத்தவுள்ளதாகவும் அனிதா குப்புசாமி மேலும் தெரிவித்தார்.




இதில் மேலும் படிக்கவும் :