அமைச்சர் வேலுமணி ஆஸ்திரேலியா பயணம்! ரத்து செய்தது என்ன ஆச்சு?


sivlaingam| Last Modified புதன், 8 நவம்பர் 2017 (15:27 IST)
தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி ஆறுநாள் பயணமாக கடந்த 5ஆம் தேதி ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் தமிழகமே வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது ஆஸ்திரேலியா பயணம் தேவையா? என்ற கேள்வி எழுந்ததால் அவர் தனது பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்தார். 


 
 
இந்த நிலையில் ரத்து செய்யப்பட்ட ஆஸ்திரேலியா பயணத்தை மீண்டும் தொடர அமைச்சர் முடிவு செய்துள்ளார். ஆஸ்திரேலியாவில் அவர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், மழைநீர் வடிகால் அமைப்பிற்கான திட்டம் ஆகியவற்றுக்கு ஆஸ்திரேலிய முதலீடுகள் மற்றும் உதவிகள் பெற முயற்சிப்பார் என தெரிகிறது.
 
அமைச்சர் வேலுமணியுடன் ஐஏஎஸ் அதிகாரிகளும் உடன் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அமெரிக்கா, லண்டனை விட மழைநீர் வடிகாலுக்கு சிறப்பான ஏற்பாடுகள் சென்னையில் செய்யப்பட்டுள்ளன என்று அமைச்சர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :