சந்நியாசிகள் எழுந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை: எஸ்.வி.சேகர்

Last Modified ஞாயிறு, 28 ஜனவரி 2018 (21:28 IST)
காஞ்சி விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்தபோது எழுந்து நிற்காத விவகாரத்தை அரசியல்வாதிகள் அரசியல் செய்து கொண்டிருக்கும் நிலையில் இதுகுறித்து எஸ்வி சேகரும் தன்னால் முடிந்த அரசியலை செய்துள்ளார்.

உடல்நலம்
முடியாத கருணாநிதி எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை என்றால், முதுகுதண்டு பாதித்த ஒருவர் எழுந்து நிற்க வேண்டிய வேண்டியதில்லை என்றால் அதுபோல் சந்நியாசியும் தமிழ்த்தால் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் சந்நியாசிகளை சராசரி மனிதர்களோடு ஒப்பிட வேண்டாம் என்றும் எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தீர்க்க வேண்டிய எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும்போது அதற்கு குரல் கொடுக்காமல், வைரமுத்து, விஜயேந்திரர் விவகாரங்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் குரல் கொடுத்து அரசியல் செய்வது ஆரோக்கியமான அரசியலாக இருக்காது என்பதே சமூக ஆர்வலர்களின் உள்ளது.


webdunia

இதில் மேலும் படிக்கவும் :