Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விசில் யாருக்கு கிடைக்கும்: ரஜினி, கமல் கடும் போட்டி!

விசில் யாருக்கு கிடைக்கும்: ரஜினி, கமல் கடும் போட்டி!

kamal rajini" />
Caston| Last Updated: திங்கள், 13 நவம்பர் 2017 (10:03 IST)
நடிகர் ரஜினியும், கமலும் அடுத்தடுத்து விரைவில் அரசியலுக்கு வர உள்ள நிலையில் அவர்கள் தொடங்க உள்ள கட்சிக்கு சின்னம் தொடர்பான விவாதம் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இதில் இருவரும் விசில் சின்னத்தை பெற கடும் போட்டிப்போட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன.

 
 
நமது நாட்டில் சின்னத்தின் அடிப்படையில் தேர்தல் நடந்து வருவதால், மக்களுக்கு பரிட்சயமான, நெருக்கமான சின்னத்தில் போட்டியிடவே கட்சிகள் ஆர்வம் காட்டும். இந்த சின்னத்தை பெற சில விதிமுறைகள் உள்ளன. முதலில் கட்சியை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட கட்சி அந்த தேர்தலில் பத்து சதவீத தொகுதிகளில் குறைந்தது போட்டியிட வேண்டும். அப்போது தான் அந்த கட்சிக்கு பொதுவான சின்னம் ஒதுக்கப்படும்.
 
ஒரு கட்சி கேட்கும் சின்னத்தை வேறு கட்சி கேட்கவில்லையென்றால் மட்டும் தான் அந்த சின்னம் அந்த குறிப்பிட்ட கட்ட்சிக்கு கிடைக்கும். இல்லையென்றால் முதலில் பதிவு செய்த கட்சிக்கு கிடைக்கும். தற்போது உள்ள சூழ்நிலையில் விசில் சின்னத்தை பெற ரஜினி, கமல் இருவரும் முயற்சித்து வருவதால் அதனை முடிவு செய்யும் செல்வாக்கு ஆளும் பாஜகவுக்கு கூடுதலாக இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :