வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : திங்கள், 13 நவம்பர் 2017 (10:02 IST)

திமுகவுக்கும் ஐடி ரெய்டு பயம் உள்ளது: பொன்னார் பகீர் பேட்டி!

திமுகவுக்கும் ஐடி ரெய்டு பயம் உள்ளது: பொன்னார் பகீர் பேட்டி!

தமிழகம் முழுவதும் சசிகலா குடும்பத்தை குறி வைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றன. இந்த ரெய்டுகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் வருகின்றன. இதனால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த வருமான வரி சோதனை.


 
 
அதே நேரத்தில் பல கட்சிகள் இந்த வருமான வரி சோதனை நடத்தப்படும் நேரத்தை குறிப்பிட்டு இந்த சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டது என குற்றம் சாட்டுகின்றன. ஆனால் இதற்கு பாஜக, அதிமுகவின் ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இந்நிலையில் நேற்று திருச்சியில் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
 
வருமான வரித்துறையினர் சுய அதிகாரம் படைத்த அமைப்பினர். அவர்களின் சோதனையில் எந்த விதமான உள் நோக்கமும் இல்லை. இந்த சோதனைக்கு பாஐக காரணம் அல்ல. காலம் கடந்து இப்போது சோதனை நடைபெறுவதற்கு வேறு காரணங்கள் கிடையாது.
 
தனி அதிகாரம் படைத்த இந்த துறைக்கு வரும் சரியான தகவல்களின் அடிப்படையில் திரட்டப்படும் ஆதாரங்கள் மூலம் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது. இது முழுக்க முழுக்க வருமான வரித்துறைக்கு வந்த தகவலின் அடிப்படையில் நடைபெற்று வரும் சோதனை என பொன்னார் கூறினார்.
 
மேலும் திமுக உள்பட எதிர்க்கட்சிகள் அனைவரும் வருமான வரி சோதனையை எதிர்ப்பது அவர்கள் மத்தியில் உள்ள அச்சத்தையேகாட்டுகிறது. அடுத்தப்பட்டியலில் நாமும் இருக்கிறமோ? என்ற பயமே இதற்கு காரணம் என அவர் தெரிவித்தார்.