ஓடி ஒழிந்த கமல் இப்போது வருவது ஏன்?: சரத்குமார் சரமாரி கேள்வி!

ஓடி ஒழிந்த கமல் இப்போது வருவது ஏன்?: சரத்குமார் சரமாரி கேள்வி!


Caston| Last Modified ஞாயிறு, 12 நவம்பர் 2017 (14:12 IST)
நடிகர் கமல், தான் விரைவில் அரசியலுக்கு வர உள்ளதாக கூறியுள்ளார். இதனால் சமீப காலமாக அரசியல் குறித்து பேசி வரும் கமல் குறித்தும் அவரது அரசியல் பிரவேசம் குறித்தும் பலரும் கருத்துக்கள் கூறி அவருடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகின்றனர்.

 
 
இந்நிலையில் தற்போது கமலின் இந்த அரசியல் பிரவேசம் குறித்து நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் விமர்சித்துள்ளார். வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் சரத்குமார் கலந்து கொண்டு பேசினார்.
 
அப்போது பேசிய அவர், ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போதே கமல்ஹாசன் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். சிங்கம் குகையில் இருக்கும் போது வந்திருப்பதை விட்டுவிட்டு, இப்போது வருவது ஏன்? விஸ்வரூபம் படம் வெளியாகும் போது ஓடி ஒழிந்தது ஏன்? ஒரு கருத்தை கூறி விட்டு வெளிநாட்டுக்கு சென்று ஓடி ஒழிந்து கொள்பவன் நான் இல்லை என கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :