வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : திங்கள், 13 நவம்பர் 2017 (09:32 IST)

தமிழகத்தில் இன்றும் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.


 

 
தமிழகத்தில் தொடங்கியுள்ள வட கிழக்கு பருவமழை காரணமாக கடந்த வாரம் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதன் பின் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மழை பொழிவு இல்லை.
 
இந்நிலையில், தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, வட கடலோர மாவட்டங்களில் இன்னும் 2 நாட்கள் கனமழை பெய்யும் என கடந்த 11ம் தேதி சென்னை வானிலை மையம் கூறியிருந்தது. அதைத் தொடர்ந்து சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நேற்று இரவு கனமழை கொட்டித்தீர்த்தது.
 
இந்நிலையில், வட கடலோர மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
 
இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் “ திங்கட்கிழமை (இன்று) பகல் 12 மணிவரை வட கடலோர மாவட்டங்கலில் மிதமான மழை பெய்யும். 12 மணிக்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில சமயங்களில் லேசான மழை பெய்யும்” என தெரிவித்துள்ளார்.