செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 4 மார்ச் 2018 (12:57 IST)

போத்தீஸ் குடோனில் தீ விபத்து: ரூ.10 மதிப்புள்ள் பொருட்கள் சாம்பல்

சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கிளைகளை கொண்ட போத்தீஸ் ஜவுளி நிறுவனத்தின் குடோன் ஒன்று காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கத்தில் உள்ளது. இந்த குடோனில் போத்தீஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பழையதுணிகள் சேமித்து வைக்கப்படும். இந்த நிலையில் நேற்றிரவு இந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்த தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் உடனடியாக குடோனுக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் தீ மளமளவென பரவி ஏராளமான துணிகள் தீக்கிரையாகிவிட்டதாக் கூறப்படுகிறது.

இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும், இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும் சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் சாம்பலாகிவிட்டதாகவும் தீயணைப்பு துறை வட்டாரங்கள் கூறுகின்றன.