Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஐபிஎல் அணியில் மேலும் ஒரு தமிழருக்கு கேப்டன் பதவி

Last Modified ஞாயிறு, 4 மார்ச் 2018 (11:40 IST)
இந்திய கிரிக்கெட் திருவிழா என்று அழைக்கப்படும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் அடுத்த மாதம் முதல் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான வீரர்களுக்கான ஏலம் சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்றது.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிஸ் செய்த தமிழக வீரர் அஸ்வினை பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது மட்டுமின்றி அந்த அணியின் கேப்டன் பொறுப்பையும் கொடுத்து அழகுபார்த்துள்ளது. தமிழக வீரர் ஒருவர் பஞ்சாப் அணிக்கு கேப்டனாகியுள்ளதால் அந்த அணிக்கு தமிழ்நாட்டு ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டனாக இன்னொரு தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் தமிழக கிரிக்கெட் ரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னை அணி, பஞ்சாப் அணி, கொல்கத்தா அணி இந்த மூன்று அணிகளுக்கும் தமிழ் ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :