Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஈசான்ய மூலையில் குப்பைகள் அகற்றப்பட்டது: 3 மாநில தேர்தல் முடிவு குறித்து எச்.ராஜா

Last Modified ஞாயிறு, 4 மார்ச் 2018 (11:15 IST)
திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா ஆகிய மூன்று மாநிலங்களிலும் நடந்த தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் திரிபுராவில் 25ஆண்டு கால கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. மேலும்
நாகலாந்து மற்றும் மேகாலயா ஆகிய இரு மாநிலங்களிலும் கூட்டணி கட்சிகளின் துணையுடன் ஆட்சி அமைக்க பாஜக முயற்சித்து வருகின்றது

இந்த நிலையில் வடகிழக்கு மாநிலங்களான மூன்று மாநிலங்களிலும் பாஜகவுக்கு கிடைத்துள்ள வெற்றி குறித்து அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: வடகிழக்கு என்பது ஈசான்ய மூலை ஆகும். ஈசான்ய மூலையில் பூஜை அறை இருக்கவேண்டும். இன்று இந்தியாவின் ஈசான்ய மூலையில் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டு நாட்டின் பூஜை அறை தெய்வீகம் பெற்றுள்ளது. இனி இந்தியாவிற்கு என்றுமே வெற்றிதான்' என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து டுவிட்டர் பயனாளி ஒருவர் கூறியபோது 'வடகிழக்கு மாநிலங்கள் ஈசான்ய மூலை தான்! ஆனால்.. தென்கிழக்கு மாநிலம் அக்னி மூலை! பெரியார் நெருப்பு! உங்களை எரிச்சிடும். ஸ்கெளட் தேர்தலில் அசிங்கப்பட்டு, ஆர்.கே.நகர் தேர்தலில் நோட்டாவிடம் வீழ்ந்த கதையை இன்னும் மறக்கவில்லையா? என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :