Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மதுசூதனனின் ஒப்புதலின் பேரில் ஜெ.வின் கைரேகை ஏற்கப்பட்டது - முதன்மை செயலாளர் விளக்கம்

வெள்ளி, 13 அக்டோபர் 2017 (17:07 IST)

Widgets Magazine

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தொடர்பாக திமுக தொடர்ந்து வழக்கில், தேர்தல் ஆணைய முதன்மைச் செயலர் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.


 

 
கடந்த வரும் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சரவணன் தோல்வியடைந்தார். அந்நிலையில், தேர்தல் ஆணைய படிவத்தில், ஏ.கே.போஸிற்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கோரி ஜெ.வின் இடதுகை பெருவிரலில் கை ரேகை வைக்கப்பட்டிருந்தது.
 
எனவே, சுயநினைவோடுதான் ஜெயலலிதா அதில் கைரேகை வைத்தாரா என்பதில் சந்தேகம் எழுப்பிய சரவணன், ஏ.கே.போஸின் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். எனவே, இதுகுறித்து தேர்தல் ஆணைய செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
 
அதன் விளைவாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணைய செயலாளர் வில்ஃபிரட் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் அளித்த ஒப்புதலின் பேரில் ஜெ.வின் கைரேகை ஏற்கப்பட்டது. அவரிடமிருந்து ஒப்புதல் கடிதம் பெறப்பட்டது. ஆனால், கைரேகை படிவத்தில் ஜெ.வின் உடல் நிலை குறித்த அறிக்கை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை என அவில்ஃபிரட் விளக்கம் அளித்தார்.
 
அதைத்தொடர்ந்து, அக்.27ம் தேதி மருத்துவர் பாலாஜி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஒத்தி வைத்தார். 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

பெங்களூர் சாலையில் கடல் கன்னி: வைரலாகும் புகைப்படம்!!

பெங்களூர் சாலைகள் கனமழை காரணமாக கடுமையாக பாதிக்கபப்ட்டுள்ளது. தற்போது பெங்களூர் சாலையில் ...

news

நடராஜன் மீது நடவடிக்கை; ஸ்டாலினுக்கு காழ்ப்புணர்ச்சி: போட்டு தாக்கும் ஜெயக்குமார்!!

அமைச்சர் ஜெயகுமார் சென்னை அடையாறில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது நடராஜன் ...

news

செல்லூர் ராஜுவுக்கு நோபல் பரிசு - ராமதாஸ் கிண்டல்

அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு நோபல் பரிசு தரப்பட வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ...

news

டெங்குவுக்கு பலியான நடிகர் கருணாஸின் தங்கை மகள்

டெங்கு காய்ச்சலுக்கு தமிழகத்தில் பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் டெங்குக் ...

Widgets Magazine Widgets Magazine