Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

உச்சிமுகந்து ஜெயலலிதா என பெயர் வைத்த சசிகலா!

உச்சிமுகந்து ஜெயலலிதா என பெயர் வைத்த சசிகலா!

செவ்வாய், 10 அக்டோபர் 2017 (17:57 IST)

Widgets Magazine

ஐந்து நாட்கள் பரோலில் வெளியே வந்த சசிகாலா ஜெயலலிதா பாணியில் இரண்டு குழந்தைகளுக்கு இன்று பெயர் வைத்துள்ளார். அதில் ஒரு குழந்தைக்கு ஜெயலலிதா என்றே பெயர் வைத்தார்.


 
 
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா தனது கணவர் நடராஜனின் உடல் நிலையை காரணம் காட்டி 5 நாட்கள் அவசர பரோலில் வெளிவந்தார். பரோலில் வெளிவந்துள்ள சசிகலாவுக்கு அவரது ஆதரவாளர்கள் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
 
குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணவர் நடராஜனை தினமும் வந்து சந்திக்கும் சசிகலாவை பார்க்க ஏராளமான அவரது ஆதரவாளர்கள் அங்கு குவிகின்றனர். இந்நிலையில் இன்று அவரை பார்க்க வந்த கூட்டத்தில் தம்பதிகள் இருவர் குழந்தைகளுடன் நின்றதை பார்த்த சசிகலா அவர்களை அழைத்தார்.
 
அவர்களிடம் இருந்து குழந்தைகளை ஒன்றன் பின் ஒன்றாக வாங்கி ஜெயலலிதா பாணியில் உச்சிமுகந்து பெயர் வைத்தார். அதில் ஒரு குழந்தைக்கு ஜெயலலிதா எனவும், மற்றொரு குழந்தைக்கு ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமார் பெயரையும் வைத்தார் சசிகலா.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

விஜயபாஸ்கருக்கு எதிராக பெண் எம்.எல்.ஏ போர்க்கொடி

போக்குவரத்து துறை அமைச்சர் விஜய்பாஸ்கருக்கு எதிராக கரூர் மாவட்ட எம்.எல்.ஏ கீதா மணிவண்ணன் ...

news

லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை சூரையாடிய காட்டுத்தீ...

கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சாண்டா ரோசா நகரத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் 1,75,000 ...

news

சசிகலாவுக்கு சிறையில் காத்திருக்கும் அதிர்ச்சி: ஆப்பு வைத்த மனித உரிமை ஆணையம்!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்து வந்த சசிகலா 5 நாட்கள் பரோலில் வெளியே ...

news

ஓரினச்சேர்க்கை திருமணம்: அங்கீகரிக்கும் 25-வது நாடாக ஆஸ்திரேலியா மாறுமா?

உலகம் முழுவதும் ஓரினச்சேர்க்கை திருமணத்துக்கு எதிர்ப்பும், ஆதரவும் கலந்து உள்ளது. ...

Widgets Magazine Widgets Magazine